இதுவரை தர்பார் படம் செய்த மொத்த வசூல் சாதனை எத்தனை கோடி தெரியுமா!

இதுவரை தர்பார் படம் செய்த மொத்த வசூல் சாதனை எத்தனை கோடி தெரியுமா!


Darpor

பேட்ட படத்தை தொடர்ந்து  ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.   மேலும் அப்படத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

மேலும் லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

rajini

இந்நிலையில் இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ. 7.28 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 33 கோடி வசூல் சாதனையும், மற்றும் உலகம் முழுவதும் மொத்தமாக 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.