சினிமா

வெறித்தனமான விவசாயியாக மாறிய தனுஷ்! பச்சை துண்டு, அறிவாளுடன் வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

Danush new looks in asuran

வடசென்னை, மாரி 2 படங்களை தொடர்ந்து அடுத்ததாக அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடக்கி, வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படம் வெக்கை என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம். 1960, 80 -களில் நடைபெறும் சம்பவங்கள் போல் படம் அமைக்கப்படுகிறது. இரட்டை வேடத்தில் தோன்றும் தனுஷ், தந்தை வேடத்தில் ஒரு விவசாயியாக நடிப்பார் போலிருக்கிறது. 

இன்று வெளியாகியுள்ள அந்தப் படத்தின் போஸ்டர்களில், ஒரு புகைப்படத்தில் தனுஷ் வயதானவராக தோளில் பச்சைத் துண்டுடன் தோன்றுகிறார். மற்றொரு புகைப்படத்தில் அதே பச்சைத் துண்டை தலையில் கட்டிக்கொண்டும், கையில் ரத்தக்கரை படிந்த அறிவாளுடனும் வீதியில் நடந்து வருகிறார். 

பச்சைத் துண்டு பொதுவாக விவசாயிகள் தங்களது அடையாளமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆக, இந்தப் படத்தில் ஒரு வெறித்தனமான விவசாயியாக தனுஷ் நடிப்பாரோ என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றுகிறது.


Advertisement