சினிமா ஆன்மிகம்

பிரபல வில்லன் நடிகருக்கு இவ்வளவு பக்தியா! என்ன செய்துள்ளார் பாருங்கள்

Summary:

Daniel balaji constructs new amman temple

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ள டேனியல் பாலாஜி, ஆவடியில் தன் சொந்த செலவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். 

டேனியல் பாலாஜி, காக்க காக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன், வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், அஞ்சான், பைரவா போன்ற படங்களில் கம்பீரமான தோற்றத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

படங்களில் வில்லனாக நடிக்கும் பலர் நிஜத்தில் அதற்கு எதிர்மறையாக இருப்பார்கள் என்பதற்கு டேனியல் பாலாஜியும் ஒரு உதாரணமாக தற்போது நிரூபித்துள்ளார். 

டேனியல் பாலாஜி, ஆவடி காந்தி நகரில் தன் சொந்த செலவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதன் கும்பாபிஷேகம் வரும் மார்ச் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக சமூக வலைத்தளங்களில் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் டேனியல். 

கடைசியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் அமைதியான தம்பி கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி, தற்பொழுது விஜய்யின் 63வது படத்தில் நடித்து வருகிறார். 


Advertisement