காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
முதன் முதலில் கோடி வசூல் செய்து சாதனை படைத்த படம் எது தெரியுமா?
சினிமா என்றாலே மக்களை மகிழ்ச்சி படுத்தும் ஒரு துறை தான். பழைய நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியவர்கள் முதல் தற்போது சிவகார்த்திக்கேயன், விஜய் சேதுபதி வரை மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே...
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் ரூ.300 கோடியை ஈசியாக தொட்டுவிடுவது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு நம்ம உலகம் முழுவதும் கோலிவுட் மார்க்கெட் பறந்து விரிந்துவிட்டது என கூட கூறலாம்...
சுமார் 70 வருடங்களுக்கு முன்பே ரூ.1.55 கோடி வசூல் செய்து இந்திய மட்டுமல்லாமல் உலக திரையுலகையே அசர வாய்த்த படம் தான் சந்திரலேகா. இந்த படம் அன்று செய்த வசூல் இன்றைய மதிப்பிற்கு சுமார் ரூ.400 கோடிக்கு மேல் இருக்கும் என சினிமா வட்டாரம் கூறுகிறது...
மேலும் இந்த படம் தமிழ் மொழி மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் டப்பிங் செய்து எடுத்து முடித்த படம் ஆகும். இதற்கான ப்ரோமோஷன் கூட இன்றைய சில படங்களுக்கு செய்ய முடியாதவையாம்...