கலாட்டா ஆரம்பம்! குக் வித் கோமாளி 3 படப்பிடிப்பு தளத்தில் வெளியான முதல் புகைப்படம்! யார் யார் இருக்காங்க பாருங்க...

கலாட்டா ஆரம்பம்! குக் வித் கோமாளி 3 படப்பிடிப்பு தளத்தில் வெளியான முதல் புகைப்படம்! யார் யார் இருக்காங்க பாருங்க...



cooku-with-comali-sesan-3-photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை  பெற்று அனைவரும்  விரும்பி பார்த்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக கடந்த சில வாரங்களுக்கு முன் 3வது சீசன் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் குக் வித் கோமாளி சீசன்3 நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்கிறார் என்ற  எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது குக் வித் கோமாளி 3 செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

Cooku

அந்த  புகைப்படத்தில் தங்கதுரை மற்றும் சுனிதா இருவரும் வித்தியாசமான லுக்கில் உள்ளனர். இந்த  புகைப்படத்தை தற்போது  ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.