"தொடர்ந்து மாணவர்களை அழ வைக்கும் நடிகர் தாமு!" நடவடிக்கை தேவை என பிரபலம் காட்டம்.!



Controversy news about actor dhamu

1992ம் ஆண்டு "வானமே எல்லை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தாமு. 90களின் காலக்கட்டங்களில் அஜித், விஜய், பிரசாந்த், பிரபுதேவா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களைக் கவர்ந்தவர்.

vijay

குறிப்பாக கில்லி படத்தில் இவர் நடித்த ஓட்டேரி நரி கதாப்பாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ள தாமு, மிமிக்ரி செய்வதிலும் வல்லவர்.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு பேச்சாளராக உரையாற்றி வருகிறார். அப்படி அவர் உரையாற்றும்போது, பெற்றோர்களின் கஷ்டங்களை உணர்ச்சி போங்க தாமு பேசும்போது, மாணவர்களும் குற்ற உணர்ச்சியால் கதறி அழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

vijay

இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் "மாணவர்களை அழவைத்துப் போலியான எமோஷனைத் தூண்டிவிடும் நடிகர் தாமு பள்ளி, கல்லூரிகளில் பேசுவதை தடுக்கவேண்டும். இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் " என்று பதிவிட்டுள்ளார்.