நடிகர் சந்தானத்திற்கு வந்த பெரும் சிக்கல்!! கமிஷனர் அலுவலகத்தில் அதிரடி புகார்!!

நடிகர் சந்தானத்திற்கு வந்த பெரும் சிக்கல்!! கமிஷனர் அலுவலகத்தில் அதிரடி புகார்!!


controvarsy-in-santhanam-a1-movie-teaser

தமிழில் பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் ‘ஏ1.’ இதில் சந்தானதிற்கு ஜோடியாக பிராமண பெண்ணாக நடிகை  தாரா நடித்துள்ளார். இப்படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார்.இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திரைப்படம் வருகிற 27-ந்தேதி திரைப்படம் வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் புகார் மனு ஒன்று அளித்துளளார். அதில் அவர்  நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏ1 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Santhanam
அது லோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல்கதை. மேலும் அந்த  டீசரில் ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி, மயங்கி விழுவது மாமியின் தோப்பனார் என பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்யும் விதத்தில் டீசர் உள்ளது. இது போன்று பிற சாதி பெண்களை, பிற சாதி பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க கூடாது.இந்நிலையில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், நடிகர் சந்தானம், ஜான்சன், ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.