நடிகர் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்திற்கு பாடலை எழுதி இசை அமைத்தது யார் தெரியுமா?



composed the song for the next film of actor GV Prakash

பிரபல திரைப்பட இசை அமைப்பாளர்களில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் ஒருவர் ஆவார். இவர் பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அவர் பல திரைப்படங்களில் நாயகனாகவும் பணியாற்றி வருகிறார். 

அந்த வகையில் தற்போது அவர் அடங்காதே, 4G மாற்றும் சர்வம் தாளமயம், ஜெயில் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் இவரது நடிப்பில் உருவான அனைத்து படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராக உள்ளது.

இந்நிலையில் இவரது நடிப்பில் உருவான " சர்வம் தாளமயம் " என்னும் திரைப்படத்தை பிரபல திரைப்பட இயக்குனர் ராஜீவ்மேனன் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் அருண்ராஜா காமராஜா எழுதிய ஒருபாடல் அமைந்துள்ளது. மேலும் அருண்ராஜா காமராஜா அவர்கள் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார்.