சினிமா

நடிகை நயன்தாரா மற்றும் ஆன்ட்ரியா மீது பரபரப்பு குற்றசாட்டு! ஏன் எதனால் தெரியுமா?

Summary:

நடிகை நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா பட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக தயாரிப்பாளரும் இயக்குனருமான கே. ராஜன் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மஸ்தான் இயக்கத்தில் அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெட்டி பசங்க. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளரும், இயக்குனருமான கே.ராஜன் கூறுகையில்,கொரோனா காலத்தில் தயாரிப்பு செலவுகளையும், சம்பளத்தையும் நடிகர், நடிகைகள் குறைக்க வேண்டும். சில நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கின்றனர். நடிகை நயன்தாரா  மும்பையில் இருந்து சிகை அலங்கார நிபுணர், ஆடை வடிவமைப்பாளரை வரவழைக்கின்றார். அவர்களது அனைத்து செலவுகளையும் தயாரிப்பாளர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. அவரது உதவியாளர், மேக்கப்மேன் என  ஏழு பேருக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் செலவாகிறது.

தமிழ் நடிகை ஆண்ட்ரியாவும் மும்பை ஆடை வடிவமைப்பாளர், ஹேர் ஸ்டைலிஸ்ட்  வேண்டும் என கேட்கின்றார். மேலும் நடிகர்களும் தங்களது பாடிகார்டுகளுக்கு  தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வேண்டுமென கூறுகின்றனர். இதுபோன்ற தேவையில்லாத செலவுகள் குறைக்கப்பட்டால்தான் சினிமா வாழும் என அவர் கூறியுள்ளார்.


Advertisement