குடிக்கு அடிமையாகி வாய்ப்புகளை இழந்த காமெடி நடிகர் முத்துகாளைக்கு அடித்தது ஜாக்பாட்!

காமெடி நடிகைகளில் மிகவும் எதார்த்தமானவர் நடிகர் முத்துகாளை. வடிவேலுடன் இவர் நடித்த ஒருபடகில் செத்து செத்து விளையாடுவோமா என இவர் செய்யும் காமெடியை ரசிக்கத்தவர்கள் யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் புதுமுக நடிகர்களின் வருகையால் இவரது வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இருந்தாலும் ஒருசில படங்களில் மட்டும் நடித்துவந்தார் முத்துகாளை.
மேலும் இவரது வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணம் இவரது குடிப்பழக்கமும்தான். அல்வா சீனிவாசனுடன் இவர் சேர்ந்து குடிப்பதை பார்த்த வடிவேலு இருவரும் விரைவில் சாக போவதாக எச்சரித்தார்.
அவரின் அந்த வார்த்தைக்கு பின் தன் மனதில் பயம் வந்துவிட்டதாகவும் குடியை நிறுத்திவிட்டதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் முத்துக்காளை.
குடிக்கு அடிமையாகி மனைவி, குழந்தைகளை கவனிக்காமல் இருந்த முத்துக்காளை வாழ்க்கையில் இப்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் பாலிவுட்டில் மேரே இந்தியா என்ற படத்தில் நடிக்கிறாராம். அப்படம் தமிழில் நம் இந்தியா என்ற பெயரிலும் உருவாகி வருகிறதாம்.