தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம்! அஜித்தின் மாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கபோவது யார் தெரியுமா?

தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம்! அஜித்தின் மாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கபோவது யார் தெரியுமா?



chiranjeevi-going-to-act-in-vedalam-remake-movie

கடந்த 2005 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன் மற்றும் லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற திரைப்படம் வேதாளம். இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது அதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் படத்தை அனில் சுக்ரா, ராம்சரண், ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். மெஹர் ரமேஷ் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் அஜித் நடித்த மாஸ் கதாத்திரத்தில் தெலுங்கு  சூப்பர் ஸ்டார்  சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

Chiranjeevi

நடிகர் சிரஞ்சீவி தற்போது கொரட்டல சிவா இயக்கும் ஆச்சாரியா  என்ற படத்தில் நடித்து வந்தார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல்  மற்றும் ஊரடங்கு காரணமாக இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. ஆனால் இந்த நிலையில் தற்போது வேதாளம் படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.