எல்லாம் தலையெழுத்து! சக்திமான் ஹீரோ செய்த மோசமான காரியத்தால் கொந்தளித்துப் போன ரசிகர்கள்! செம கடுப்பாகி பாடகி சின்மயி கண்டனம்!

எல்லாம் தலையெழுத்து! சக்திமான் ஹீரோ செய்த மோசமான காரியத்தால் கொந்தளித்துப் போன ரசிகர்கள்! செம கடுப்பாகி பாடகி சின்மயி கண்டனம்!


chinmayi-condemned-to-sakthiman-mukesh-kanna

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1997ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி பெரும் அளவில் பிரபலமான தொடர் சக்திமான். இதில் சக்திமானாக நடித்தவர் நடிகர் முகேஷ் கண்ணா. அவர்  90ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோவாக இருந்தார். இவர் அதனைத் தொடர்ந்து ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் முகேஷ் கண்ணா மீட்டு குறித்து பேட்டி ஒன்றில் பேசியது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் கண்ணா சமீபத்தில் பேட்டி ஒன்றில், பெண்களுடைய வேலை வீட்டை கவனித்துக் கொள்வதுதான் பெண்கள் வேலைக்கு சென்ற பிறகுதான் இத்தகைய பிரச்சினை தொடங்கியது. பெண்கள் தங்களை ஆண்களுக்கு நிகரான பதில் என்ன நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அப்படி கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சை ஆன நிலையில், அவருக்கு எதிராக கண்டனங்களும் கண்ணா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எல்லாம் துவங்கியது. இந்த நிலையில் இதுகுறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை வந்ததாக முகேஷ் கன்னா கூறியிருக்கிறார். ஆண்கள் தங்கள் கைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் வரவில்லையாம். இவரை போன்ற மனநிலை உடையவர்களால் எனக்கு சோர்வு வருகிறது. இவர்கள் மாறப்போவது இல்லை. நச்சுக்கருத்தை தங்களுக்குள் வைத்துக்கொள்ளப்போவதும் இல்லை” தலையெழுத்து என்று என ஆவேசமாக கூறியுள்ளார்.