சினிமா

பிக்பாஸ் மதுமிதாவை அடுத்து சேரன் தற்போது யாரை சென்று சந்தித்துள்ளார் பார்த்தீர்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

cheran meet sakshi family

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 105 நாட்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சேரன். 

 பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர் வயது எதற்கும் ஒரு தடையில்லை என்பதற்கேற்ப அங்கிருந்த இளைஞர்களுக்கு இணையாக பல்வேறு போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் சேரன் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர் என்பதையும் தாண்டி நல்ல அப்பாவாகவும் , அண்ணனாகவும், நண்பனாகவும் அனைவருக்கும் அறிவுரை வழங்கி வந்தார்.

cheran with madhumitha க்கான பட முடிவு

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன் மிகவும் பிசியாக இருந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு வெளியேறிய மதுமிதா வீட்டிற்கு சென்றிந்திருந்தார். அங்கு அவருக்கு தலைவாழை இலையில் விருந்து நடைபெற்றுள்ளது.மேலும் சாக்ஷி மற்றும் ஷெரின் இருவரும் சேரன் வீட்டிற்கு அடிக்கடி சென்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது சேரன் அவரது மகளுடன் சாக்ஷி வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு சாக்ஷியின் குடும்பத்துடன் மிகவும் உற்சாகத்துடன் நேரம் செலவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களை சாக்ஷி மிகவும் மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.