இன்றும் சென்னை அணி வெற்றிபெறுவது மிகவும் கடினம்! ஏன் தெரியுமா?

Chennai vs Mumbai qualifier one match prediction


chennai-vs-mumbai-qualifier-one-match-prediction

ஐபில் போட்டியின் 12 வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்குகிறது. சென்னையின் சொந்த மண்ணில் நடைபெறும் இன்றைய ஆட்டமானது இரவு 7 . 30 மணிக்கு தொடங்கவுள்ளது.

புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணி சென்னை அணியை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதிபெறும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியுறும் அணி டெல்லி அல்லது கைதராபாத் அணியுடன் மற்றொரு ஆட்டத்தில் விளையாடும்.

IPL 2019

சீசன் 12 பொறுத்தவரை சென்னை, மும்பை அணிகள் இடையே நடந்த இரண்டு போட்டியிலும் மும்பை அணி வெற்றிபெற்றது. இந்த 2 போட்டிகள் மட்டும் இல்லாது கடந்த சீசனையும் பார்த்தோமேயானால் சென்னை, மும்பை இடையே நடந்த 5 போட்டிகளில் சென்னை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

கடந்த வருடம் மும்பை அணியுடன் நடந்த போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியையே தழுவியுள்ளது. வெற்றி சதவீதத்தின்படி இன்றைய ஆட்டத்திலும் சென்னை அணி வெற்றிபெறுவது கடினம்தான். ஆனால் இன்றைய போட்டியானது சென்னையில் நடைபெறுவதால் சென்னை அணி வெற்றிபெற சற்று வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

IPL 2019