சினிமா

உத்து பார்த்தாலும் வித்தியாசம் தெரியல.. அப்படியே நயன்தாரா போலவே இருக்கும் பெண்.. வைரல் புகைப்படம்

Summary:

சென்னையை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சென்னையை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தனி நாடியாக இவர் நடிக்கும் படங்கள் பெரிய ஹீரோக்களின் பட அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது.

அந்த அளவிற்கு புகழோடு இருக்கும் இவரை போன்று நாமும் இருக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. எல்லோருக்கும் இந்த ஆசை இருந்தாலும் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே உள்ளார் சென்னையை சேர்ந்த மாடல் அழகி லுத் புனிசா என்பவர். நயன்தாரா போலவே இருக்கும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

நயன்தாரா போன்றே இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதற்கு முன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராய் போன்றே இருந்த கேரளாவை சேர்ந்த அமிர்தா என்பவர் தற்போது சினிமாவில் நடிகையாகிவிட்டார். தற்போது  லுத் புனிசாவுக்கும் நிறைய பட வாய்ப்புகள் வருவதாகவும், அவரும் விரைவில் நாயகியாக மாறிவிடுவார் எனவும் கூறப்படுகிறது.


Advertisement