வாவ்.. குக் வித் கோமாளி செஃப் வெங்கடேஷ் பட் மகளா இது! செம கியூட்டா இருக்காரே! வைரலாகும் புகைப்படம்!!
வாவ்.. குக் வித் கோமாளி செஃப் வெங்கடேஷ் பட் மகளா இது! செம கியூட்டா இருக்காரே! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் இரண்டு சீசன்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர்கள் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட். இருவருமே போட்டியாளர்களிடம் கறாராக இல்லாமல் ரகளைகள் செய்து செம ஜாலியாக இருந்து வந்தனர். இதனாலேயே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானது எனலாம்.
தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து செஃப் வெங்கடேஷ் பட் கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ரீமேக்காகும் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் பட் மகளின் பிறந்தநாள் விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக அதனை கண்ட நெட்டிசன்கள் வெங்கடேஷ் பட் மகளா இது! செம கியூட்டாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.