சினிமா

சூப்பர்.. குக் வித் கோமாளி சீசன் 3 எப்போ தெரியுமா? செஃப் தாமு வெளியிட்ட அசத்தலான தகவல்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரையும் பெருமளவில் கவர்ந்து பிரபலமான நிகழ்ச்சி குக்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரையும் பெருமளவில் கவர்ந்து பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 
இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா. ஷகிலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதியாகியிருந்தனர்.

மேலும் புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, சரத் ஆகியோர் கோமாளிகளாக பெரும் ரகளைகள் செய்து வந்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அதில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஷகிலா இரண்டாவது இடத்தையும், அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவியது.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைய போவது ரசிகர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்கள் கோமாளிகள் மற்றும் நடுவர்கள் என அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செஃப் தாமு சமீபத்தில் அளித்த பேட்டியில், குக் வித் கோமாளியின் 3வது சீசன் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கவுள்ளது எனவும், 3வது சீசனில் கோமாளிகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    


Advertisement