செக் மோசடி.! 6 மாதம் ஜெயிலுக்கு செல்லும் அஜித் பட நடிகை!!check-fraud-6-month-jail-punishment-to-famous-actress

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை கோய்னா மித்ரா. இவர் தூள் படத்தில் கொடுவா மீசை என்ற பாடலுக்கும், சூர்யாவின் அயன் படத்தில் ஹனி, ஹனி என்ற பாடலிலும் நடனமாடியிருந்தார். 

நடிகை கொய்னா மித்ரா மாடல் அழகி பூனம் செதி என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடனை திருப்பி கேட்ட  மாடல் அழகியிடம் கோய்னா மித்ரா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் கோய்னாவின் வங்கிக்கணக்கில் பணமில்லாமல் காசோலை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

check fraud

இதனை தொடர்ந்து இந்த காசோலை மோசடி குறித்து மாடல் அழகி பூனம் செதி  நடிகை கோய்னா மித்ரா மீது மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நடிகை கோய்னா மித்ராவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது .

check fraud

மேலும் பூனம் செதிக்கு மேலும் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை நடிகை கோய்னா மித்ரா வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.