மருத்துவமனையில் ரகளை செய்த நடிகர் மன்சூர் அலிகான்.! அவர் மீது பாய்ந்த 5 வழக்கு.!

மருத்துவமனையில் ரகளை செய்த நடிகர் மன்சூர் அலிகான்.! அவர் மீது பாய்ந்த 5 வழக்கு.!



case-filed-on-mansur-alighan

தமிழ்  சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெட்ரா நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விவேக் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரலாம். ஆனால் உயிரிழப்புகள் இருக்காது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்தநிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி போட்டதுதான் என தகவல்கள் பரவி வந்தது. 

     Mansoor alikhan

இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், விவேக் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் 100% எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.  இந்தநிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவமனை சென்ற நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கிற்கு ஏன் தடுப்பூசி போடீங்க என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், தடுப்பூசி குறித்து பொய்யான தகவலை பரப்பிய காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நோய்த்தொற்று தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.