சினிமா

போனி கபூருடன் இணைந்து மீண்டும் அடுத்தடுத்த படங்களில் தல அஜித்; சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

Summary:

bonikapour - thala ajith - next movie plane - salary 100 crores

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் அஜித் பேசிய வசனம் ரசிகர்களில் ஆழ் மனதில் பதிந்துவிட்டது. அதனைத் தொட்ர்நது படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இப்படத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் மீண்டும் இரண்டு படங்களில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக இந்த மூன்று படங்களுக்கும் சேர்த்து அஜித்துக்கு ரூ. 100 கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தில் வக்கீலாக வருகிறார் அஜித். இதைத் தொடர்ந்து அடுத்த படத்தில் கார் ரேசர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், மூன்றாவது படம் ஆக்ஷன் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகின் பல்வேறு இடங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக தெரிய வந்துள்ளது.


Advertisement