சினிமா

அஜித் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! நேர்கொண்ட பார்வை குறித்து தயாரிப்பாளர் புதிய தகவல்!

Summary:

Boni kapoor about nkp release date

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் அஜித் பேசிய வசனம் ரசிகர்களில் ஆழ் மனதில் பதிந்துவிட்டது. அதனைத் தொட்ர்நது படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், படத்தினை வரும் ஆகஸ்ட் துவக்கத்தில், குறிப்பாக ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


Advertisement