சினிமா

அஜித் வீட்டில் பாம்ப் வச்சுருக்கேன்..! போலீசாருக்கு வந்த போன் கால்..! உஷாரான போலீசார்..!

Summary:

Bomb blast threat to actor ajith house

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் தமிழக காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு போன் செய்தநிலையில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு போன் செய்து கூறிவிட்டு, உடனே அழைப்பை துண்டித்துவிட்டார். இதனை அடுத்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் அஜித்தின் வீட்டை சோதனையிட்ட போலீசார் வெடிகுண்டு ஏதும் கிடைத்தநிலையில் மிரட்டல் வெறும் புரளி என கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணையில் இறங்கிய போலீசார், போன் செய்து மிரட்டல் விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் எனவும், அந்த நபர் இதுபோன்று பலமுறை முக்கிய பிரமுகர்களின் வீட்டிற்கு போன் செய்து மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்று வந்தவர் எனவும், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் இந்த தகவல் விழுப்புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில் தலைமறைவாக உள்ள அந்த குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement