சினிமா

பிரபல நடிகர், நடிகை வீட்டில் நேர்ந்த பெரும் துயரம்.! கண்ணீரில் மூழ்கிய திரைப் பிரபலங்கள்!

Summary:

bolywood actor ajav devkhan father passed away

தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான பாலிவுட் நடிகை கஜோல். இவர் அண்மையில் தனுஷ் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் நடித்திருந்தார்.

இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் காஜல் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் தற்பொழுது அஜய் தேவ்கன் மற்றும் காஜல் குடும்பத்தில் பெரும் சோகம் எழுந்துள்ளது.

ajay devgan  wife க்கான பட முடிவு

அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன்  இன்று காலை மும்பையில் காலமானார். பாலிவுட்டில் மிக பிரபலமான சண்டை பயிற்சி இயக்குனரான வீரு தேவ்கன் 100 படங்களுக்கு மேல் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார்.

veeru devgan funeral க்கான பட முடிவு

 இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரு தேவ்கன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை ஆறு மணியளவில் நடைபெற உள்ளது இந்த நிலையில் வீரு தேவ்கனின் மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


Advertisement