கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள் இரங்கல்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள் இரங்கல்!!



Bollywood singer shravan rathod dead

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் 66 வயது நிறைந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் 1990-ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இவர்கள் இருவரும் இணைந்து ஆஷிக்கி,  சாஜன், பர்தேஸ், ராஜா ஹிந்துஸ்தானி  உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளனர். இவை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தது.

நதிம் மற்றும் ஷ்ரவன்  இருவரது கூட்டணியும் 2000ஆம் ஆண்டு உடைந்தது. பின்னர் இருவரும் மீண்டும் 2009 ஆம் ஆண்டு இணைந்து டு நாட் டிஸ்டர்ப் என்ற படத்தில் பணியாற்றியிருந்தனர். இந்த நிலையில் ஷ்ரவன் ரத்தோடு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Shravan rathod

அவரது உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி ஷ்ரவன் ரத்தோடு நேற்று இரவு உயிரிழந்தார். இந்நிலையில் ஷ்ரவன் ரத்தோட் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.