மாஸ்டர் படத்தில் இதெல்லாம் சேர்க்க போறாங்களா! ரசிகர்களை குஷியாக்க செம பிளான்!

மாஸ்டர் படத்தில் இதெல்லாம் சேர்க்க போறாங்களா! ரசிகர்களை குஷியாக்க செம பிளான்!



Bloopers scene joined in master movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. ஆனால் அவ்வப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு புதிய அப்டேட் வெளியாகி கொண்டுள்ளது. இந்த படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார். இது ஒரு உண்மை கதை என பல தகவல்கள் வெளிவந்தது.

master

இந்நிலையில் தற்போது படத்தில் ப்ளூப்பர்ஸ், அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய விஷயங்கள், படபிடிப்பின் போது நடந்த சொதப்பல்கள் போன்ற பல காட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே இதுபோன்ற காட்சிகளை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்ப்பர். எனவே இந்த காட்சிகள் படத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.