முக்கிய நபருக்கு கன்னியாகுமரி தொகுதி.! பாஜக அதிரடி.!

முக்கிய நபருக்கு கன்னியாகுமரி தொகுதி.! பாஜக அதிரடி.!


bjp-placed-important-persion-as-condidate-in-kanyakumar

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். இந்தநிலையில் மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியது.

bjp

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரசில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் அதேதே தொகுதியில், மறைந்த வசந்தகுமாரின் மகனுடன் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.