நிர்வாணமாக நடிக்க தயார்!! பிக்பாஸ் பிரபலத்தின் அதிரடி முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!!bindhu-madavi-talk-about-act-as-nude

தமிழ் சினிமாவில் திரைப்படம் மூலம்  நடிகையாக அறிமுகமானவர் பிந்து மாதவி. அதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமாகவில்லை. பின்னர்  சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பிந்து மாதவி சற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஆசிரியையாக சிறு வேடத்தில் நடித்திருந்தார்  பின்னர் விமலுடன் மீண்டும் இணைந்து தேசிங்கு ராஜா  படத்தில் நடித்தார்.

bindhu madavi

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி பிந்து மாதவிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில் பிந்துமாதவி தற்போது சத்யா சிவா இயக்கத்தில் கிருஷ்ணா ஜோடியாக கழுகு 2 படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்.

bindhu madavi

 இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்தது குறித்து கேட்டபோது, ஆடை படத்தில் அமலாபாலின் தைரியமான முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆடை படம்போலவே, எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நிர்வாணமாக நடிக்க நான் தயார். படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன். ஆனால்  அதற்கு ஏற்றது போல் நல்ல கதை அமையவேண்டும் என்று கூறியுள்ளார்.