சினிமா

இதுவரை பிகில் செய்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா? உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்.

Summary:

Bigil vijay vasul

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் சாதனை படைத்தது போல இந்த படமும் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல் பிகில் படம் இதுவரை 85 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த வார இறுதிக்குள் 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


Advertisement