சினிமா

இரண்டாம் நாள் வசூலில் பின்தங்கிய பிகில்! இத்தனை கோடி மட்டும் தான் வசூலா!

Summary:

Bigil vijay vasul

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக வெளியான படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் முதல் நாள் சாதனை படைத்தது.

ஆனால் இரண்டாவது நாளான நேற்று அந்த அளவிற்கு வசூல் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் சேர்த்து மொத்தமாக 16 கோடி மட்டுமே வசூல் ஈட்டியுள்ளது. ஆனால் முதல் நாள் 25 கோடி வசூல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement