பிகில் பட ஷூட்டிங் நடப்பது இங்குதானா? லீக்கான சுவாரஸ்ய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!bigil-shooitngspot-photo-leaked

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

Bigilமேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

மேலும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதால் அதன் படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று முதல் இறுதிகட்ட படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில் இன்று சென்னையில் உள்ள எஸ்எஸ்என் கல்லூரியில் ஷூட்டிங் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்த புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigil