ஆட்டம் வெறித்தனம்.! இணையத்தையே அதிரவைத்த பிகில் ட்ரைலர்! மாஸ்காட்டும் ரசிகர்கள்!!



Bigil movie trailer released

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Bigilஇந்நிலையில் சமீபத்தில் பிகில் படத்தின் பாடpல்கள் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து, பிகில் டிரெய்லர் வருகிற 12-ந்தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.  அதன்படி தற்போது பிகில் பட ட்ரைலரை சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் அதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

ll