முதல்முறையாக புதிய ஸ்டைலில் பிகில் ஆடியோ வெளியீடு.! வெளிவந்த புதிய தகவலால் கெத்து காட்டும் விஜய் ரசிகர்கள்!!

முதல்முறையாக புதிய ஸ்டைலில் பிகில் ஆடியோ வெளியீடு.! வெளிவந்த புதிய தகவலால் கெத்து காட்டும் விஜய் ரசிகர்கள்!!


bigil-audio-launch-information-leaked

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Bigil

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் சிங்கப்பெண்ணே பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் செட்டும் கால்பந்து மைதானத்தை போலவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான டிக்கெட்டுகளையும் படக்குழுவே நேரடியாக ரசிகர்களுக்கு இணையத்தில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

BigilBigil