சினிமா

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த செம மாஸ் தகவல்.! வெறித்தனமான உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!!

Summary:

bigil audio launch date announced

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பிகில். இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Image result for bigilஇந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் சிங்கப்பெண்ணே, மற்றும்  ஏ. ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அதில் செப்டம்பர் 19ம் தேதி பிகில் இசைவெளியீட்டு விழா நடைபெறவிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அதில் விஜயின் மாஸான பேச்சு, ஏ.ஆர் ரஹ்மானின் இசை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Advertisement