கதறிய ஜனனியை நொடியில் வெளியேற்றிய சக போட்டியாளர்கள்.. அதிர்ச்சி ப்ரோமோ வைரல்.!BiggBoss Season 6 Promo Janani Cry

 

விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது தனது 6-வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, நடன இயக்குனர் ராபர்ட், சமூக ஆர்வலர் தனலட்சுமி, இலங்கை செய்திவாசிப்பாளர் ஜனனி, நடிகை ஆயிஷா, பாடகர் அசல் கோலார், மைனா நந்தினி உட்பட பலரும் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களின் கதை சொல்ல அனுமதி கொடுக்கிறார். ஆனால் யார் முழுவதுமாக கதையை கூறுகிறார்களோ, அவர்கள் அடுத்தவார எலிமினேஷன் இருந்து தவிர்க்கப்படுவார்கள் என்று கூறுகிறார். 

Bigg boss

இதனால் போட்டியாளர்களுக்குள் போட்டி ஏற்பட்டு ஒருவரையொருவர் அவர்களின் கருத்துக்களை கூறவிடாததால் மனம் கலங்கும் நேரத்தில், ஜனனி தனது நிலையை எடுத்து கூறவரும் போது அனைவரும் பஸர் அளித்துவிட்டதால் அவர் கண்ணீருடன் வெளியேறினார். இது குறித்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.