சினிமா

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஓன்று சேர்ந்த இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள்!

Summary:

Bigg boss yashika and mahat combined and acting in a new movie

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மாபெரும் வெற்றி பெற்றது. இதனை உலக நாயகன் கலஹாசன் தொகுத்து வழங்கினார்.

சீசன் ஓன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து சீசன் இரண்டு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் நடிகை ரித்விகா பரிசினை தட்டி சென்றார். பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டாலே பிரபலமாகிவிடலாம் என்பது உண்மைதான். அந்த வகையில் சீசன் ஒன்றில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்துவிட்டனர். படமும் ஹிட்.

தற்போது இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்துகொண்டவர்கள் மகத் மற்றும் யாஷிகா. இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது, ஆனால் மகத்திற்கு பிராச்சி என்ற காதலி இருப்பதாகுவம் கூறப்பட்டது. தற்போது மகத் மற்றும் யாஷிகா காதலிக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை.


இதெல்லாம் ஒருபுறம் இருக்க மகத் மற்றும் யாஷிகா இருவரும் ஒரு படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராத நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து விரைவில் படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.


Advertisement