மீண்டும் காதலில் விழுந்த வனிதா.. அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ புகைப்படம்..

மீண்டும் காதலில் விழுந்த வனிதா.. அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ புகைப்படம்..


Bigg boss vanitha in love viral post

தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக நடிகை வனிதா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகிவிட்டார். இவரது பிரபலமாவதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு காரணம் என்றாலும், இவர் மீது எழும் சர்ச்சைகள் இவர் பிரபலமானதற்கு மேலும் ஒரு காரணம்.

vanitha

ஏற்கனவே இரண்டு திருமணம், பிரபல டான்ஸ் மாஸ்டருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை என பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துவந்த இவர், சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் முதல், ரசிகர்கள் வரை எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அவரது கெட்டநேரம் அந்த காதல் திருமணமும் நீண்டநாள் நிலைக்கவில்லை. தற்போது பீட்டர் பாலை விலகி வாழ்ந்துவருகிறார் வனிதா. இந்நிலையில் தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும், இப்போ சந்தோசமா இருக்கா? என பிரபல நடிகர் ரியாஸ்ஸ்கான் மனைவி உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்துள்ளார்.

இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள், வழக்கம்போல் மீண்டும் வனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.