சினிமா Bigg Boss

முதல் வாரமே குறும்படமா? பிக்பாஸ் வீட்டில் 2 வது நாளே முத்திய சண்டை! எகிறி அடிக்க துணிந்த அனிதா சம்பத்.!

Summary:

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே குறும்படம் போடும் அளவிற்க்கு போட்டியாளர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே குறும்படம் போடும் அளவிற்க்கு போட்டியாளர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. பிக்பாஸ் என்றாலே வாக்குவாதம், சண்டை, குறும்படம் என செம பரபரப்பாக போவது வழக்கம். இந்த சீசனிலும் அதற்கு பஞ்சம் இல்லாதவகையில் போட்டியின் இரண்டாவது நாளே போட்டியாளர்களிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ ஒன்றில், போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி, தான் செய்தியாளர்களிடம் பேசமாட்டேன், ஏனென்றால் அவர்கள் பேசும்போது எச்சில் தெறிக்கும் என தன்னிடம் கூறியதாக அனிதா சம்பத் கூறுகிறார். ஆனால் நான் அவ்வாறு பேசவில்லை எனவும், இல்லாத ஒன்றை அனிதா சம்பத் கூறுவதாகவும் சுரேஷ் வாக்குவாதம் செய்கிறார்.

பிக்பாஸ் வீட்டின் சமயலறையில் நடைபெறும் இந்த வாக்குவாதத்தில், சுரேஷ் இவ்வாறு கூறுவது மிகவும் கீழ்த்தரமாக இருப்பதாக அனிதா சம்பத் கூறுகிறார். அதுமட்டும் இல்லாமல், சுரேஷ் அப்படி கூறினாரா இல்லையா என பார்க்க குறும்படம் போட்டு காட்டட்டும் என அனிதா சம்பத் கூற, குறும்படம் என்ன, பெரிய படமே போட்டு காட்டட்டும் என சுரேஷ் சக்கரவர்த்தி கூறுகிறார்.

ஒருகட்டத்தில் அனிதா சம்பத் எகிறிக்கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தியிடம் செல்ல, அங்கிருந்த சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது நாளே உங்க சண்டையை ஆரம்பிச்சிட்டீங்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement