விஜயை தூக்கி கீழே போட்ட பிரதீப்; தலையில் அடிபட்டு கதறிய விஜய்.. பிக் பாஸ் வீட்டுக்குள் அடிதடி.!

விஜயை தூக்கி கீழே போட்ட பிரதீப்; தலையில் அடிபட்டு கதறிய விஜய்.. பிக் பாஸ் வீட்டுக்குள் அடிதடி.!



Bigg Boss Season 7 Tamil 19 Oct 2023 Pradeep Hits Vijay 

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது  தினமும் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. 

வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்கள் தங்களை மக்கள் முன்னிலையில் பிரபலப்படுத்த தொடர்ந்து பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பாலாஜி முருகதாஸ், அசிம் வரிசையில் தற்போதைய சீசனில் பிரதீப் வர்மா தொடர்ந்து ஆவேசமாக செயல்படும் நடத்தை மூலமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையை பார்க்கிறார். 

தற்போது, பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் விஜயை அவர் தூக்கி தரையில் போட, தலையில் பலத்த அடி விழும் அளவிற்கு விஜய் கீழே போடப்பட்டார். 

இதனைக்கண்ட போட்டியாளர்கள் அதிர்ச்சியாக, பலரும் கொதித்துப்போய் இருக்கின்றனர். அவரின் செயல்பாடுகள் கடுமையாக இருப்பதால், உடனடியாக ரெக்கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுகிறது.