இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவரா?? வைரலாகும் தகவல்..

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவரா?? வைரலாகும் தகவல்..


Bigg boss season 5 first eviction

பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் நமீதா விலகியிருக்கலாம் என செய்திகள் வெளியாகிவருகிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தொகுப்பாளினி ப்ரியங்கா, இம்மான் அண்ணாச்சி, பவானி ரெட்டி என இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் விளையாடிவருகின்றனர். இவர்களில் திருநங்கை நமீதாவும் ஒருவர்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நமீதா, பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் கதை சொல்லும் டாஸ்கில் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்துக்கொண்டார். 8 வயதில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழவேண்டும் என தனது போராட்டங்கள் குறித்து பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார்.

Bigg boss

இந்நிலையில் நமீதா தவிர்க்கமுடியாத சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் வீட்டில் இருக்கும் 17 போட்டியாளர்களும் சோபாவில் அமர்ந்துள் கமலுடன் உரையாடுவது போன்றும், அதில் நமீதா இல்லாததால் அவர் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Bigg boss