சினிமா

மீண்டும் சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு! தீவிரமாக போட்டிபோடும் 5 போட்டியாளர்கள். வீடியோ.

Summary:

Bigg boss promo video day 96 video

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 96 நாட்களை கடந்துள்ள சீசன் மூன்று இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. முகேன் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி ஏற்கனவே இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது, யாரெல்லாம் இறுதி வாரத்திற்கு போக போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விஜய் டிவி புகழ் நடிகர் கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு நேற்று வீட்டில் இருந்து வெளியேறினார். கவினின் திடீர் வெளியேற்றத்தால் சாண்டி, லாஷ்லியா மற்றும் மாற்றப்போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் போட்டியாளர்களை மீண்டும் உசுப்பேற்றும் வகையில் புது டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அந்த டாஸ்கில் கண்ணாடி பெட்டியில் தர்மாகோல் துண்டுகள் இருக்கிறது. அதை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தன் இரு கைகளிலும் பாக்ஸிங் க்லவுஸ் போட்டுக் கொண்டு எடுத்து அவரவர் கண்ணாடி பவுலில் நிரப்ப வேண்டும்.

போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது டாஸ்கினை தொடங்கியுள்ளனர். இதோ அந்த வீடியோ. 


Advertisement