சினிமா

முகினுக்கு செம ஆப்பு வைக்க காத்திருக்கும் கமல்! வெளியானது இன்றைய ப்ரோமோ வீடியோ.

Summary:

Bigg boss promo video

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நடிகை கஸ்த்தூரி 17 வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களும் ரசிகர்களும் கமலின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

சரவணனின் திடீர் வெளியேற்றம் குறித்து கமல் இன்று பேசுவாரா? சரவணன் வெளியேற கமல்தான் காரணம் என பல விவாதங்கள் போகும் நடைபெறும் நிலையில் இதுகுறித்து கமல் என்ன கூற போகிறார் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் நடக்கும் முக்கோண காதல் கதையை கிழித்தெடுத்த நடிகர் கமல் இன்று மூன்று விதமான நண்பர்கள் குறித்து பேசியுள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்பு அபிராமியுடன் பேசிக்கொண்டிருக்கையில் முகின் கட்டிலை அடித்து உடைத்தார்.

இது நட்பா? என கேள்வி கேட்டுள்ள கமல், இன்று அணைத்து போட்டியாளர்களையும் பிரித்து மேய போகிறார் என்பதை தெளிவாக காட்டும் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ. 


Advertisement