சினிமா

கவிஞர் ஸ்நேகனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஓவியா? அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி!

Summary:

Bigg boss oviya acting with kavingar snehan

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடர் பிக் பாஸ். இதன் சீசன் ஓன்று மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த இரண்டாவது சீசன் தொடங்கி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் ஒன்றில் தனது செயல்களால் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் ஓவியா. தனது சக போட்டியாளர் ஆரவ் வை  காதலித்து அந்த காதல் தோல்வியடைந்ததால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியில் வேணாத அவருக்கு ரசிகர்கள் மிகப்பெரும் மரியாதை செலுத்தினர். ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே ஓவியாவுக்கு துணை நின்றது.

மேலும் அதே போட்டியில் பிரபலமானவர் கவிஞர் சினேகன். சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இவர் தற்போது சினிமாவில் நடிக்க உள்ளார்.

 'பனங்காட்டு நரி' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை யமுனா படத்தை இயக்கிய  இ.வி கணேஷ்பாபு இயக்குகிறார். இதில் சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க உள்ளார். இது ஓவியா ஆர்மி மற்றும்  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மேலும் இதுகுறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகனுக்கு படவாய்ப்புகள் குவிந்த நிலையில் உள்ளதால் சினிமா துறையில் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement