சினிமா

ஆத்தி!! லாஷ்லியாவா இது!! நாளுக்கு நாள் அழகு கூடிகிட்டே போகுதே! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

Summary:

பிக்பாஸ் புகழ் லாஷ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் புகழ் லாஷ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபாலமானவர் இலங்கையை சேர்ந்த பெண் செய்திவாசிப்பாளரான லாஷ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர், பின்னர் சக போட்டியாளர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி கடும் விமர்சனங்களை சந்தித்தார்.

எனினும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு தொடர்ந்து இருந்ததால் எப்படியும் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் போட்டியின் இதுவரை சென்ற இவரால் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஆனாலும் அம்மணிக்கு தற்போது படவாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரெண்ட்ஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் லாஷ்லியா. அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து புது புது படங்களில் ஒப்பந்தமாகிவரும் இவர், சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார்.

தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது கோட்டு சூட் அணிந்து பார்க்க அல்ட்ரா மாடர்னாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement