சினிமா

சைக்கிளை வைத்து வித்தை காட்டும் பிக்பாஸ் ஜூலி..! பெரிய வித்தைக்காரி தான் போல..! வைரலாகும் புகைப்படங்கள்.!

Summary:

Bigg boss julie latest photo goes viral

சைக்கிளை வைத்து வித்தை காட்டும் பிக்பாஸ் ஜூலியன் புகைப்படம் சில சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த பூக்களை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார். 

ரசிகர்களின் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் அங்கு செய்த ஒருசில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை நெட்டிசன்கள் இவரை எங்கு பார்த்தாலும் கலாய்க்க தொடங்கிவிடுகின்றனர்.

பிக் பாஸின் அழைப்பை நிராகரித்த ஜூலி ...

ஆனால் தன் மீது வீசப்படும் கேலி கிண்டல்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு தற்போது வளரும் நடிகையாக ஜொலித்து வருகிறார் பிக் பாஸ் ஜூலி. இந்நிலையில் ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சைக்கிள் ஒன்றை தனது கைகளால் தலைக்கு மேல் தூக்கி வித்தைகாட்டுவது போல் போஸ் கொடுத்துள்ளார் ஜூலி.  மேலும் அந்த பதவில் "சைக்கிள் ஓட்டத் தொடங்குங்கள், ஏனென்றால் நம் இயற்கையின் பரிசை இழந்தவுடன் நம் வாழ்க்கையை இழப்போம்" என தத்துவ கேப்ஷன் கொடுத்துள்ளார்."

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல் அவரை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.


Advertisement