சினிமா

நேர்மை, நியாயம் என பேசும் சேரன் இப்படியா ஏமாற்றுவது? வைரலாகும் வீடியோ.

Summary:

Bigg boss cheran video goes viral

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய 70 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 18 பிரபலங்களில் தற்போது 8 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இதில் பிரபல இயக்குனர் சேரனும் ஒருவர். தற்போதுள்ள போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான, முக்கியமான போட்டியாளர்களில் இவரும் ஒருவர். பிக்பாஸ் வீட்டில் எப்போதும் நியாயம், நேர்மையுடன்தான் சேரன் பேசிவருவார். அப்படி இருக்க நேற்றைய டாஸ்க் ஒன்றில் சேரன் செஞ்ச பிராடு தனத்தை ரசிகர்கள் ஆதாரத்துடன் கலாய்த்து வருகின்றனர்.

நேற்றைய டாஸ்கில் ப்ரூட்டி பாட்டிலை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதை கையில் பிடிக்காமல் குடிக்கவேண்டும் என கூறப்பட்டது. அணைத்து போட்டியாளர்களும் பாட்டிலை கையில் பிடிக்காமல் குடிக்க சேரன் மட்டும் பாட்டில் இருந்த அட்டையை கையில் பிடித்து குடிக்கிறார். இதனை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.

 


Advertisement