சன் டிவியின் இந்த பிரபல சீரியலில் களமிறங்குகிறாரா பிக்பாஸ் யாஷிகா! வைரலாகும் கலக்கலான ப்ரமோ வீடியோ!

சன் டிவியின் இந்த பிரபல சீரியலில் களமிறங்குகிறாரா பிக்பாஸ் யாஷிகா! வைரலாகும் கலக்கலான ப்ரமோ வீடியோ!



bigboss-yashika-in-roja-serial-promo

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிய நிலையில், அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை,  சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த சமீபத்தில்  தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து படப்பிடிப்புகள் மீண்டும் பரபரப்பாக துவங்கியுள்ளது. 

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது தொடர் ரோஜா. டி.ஆர்.பி யில் முதலிடத்தில் இருந்த இந்த தொடர் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. மேலும் அதன் பழைய எபிசோடுகள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனையும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ரோஜா தொடரில் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மீண்டும் வீட்டிற்கு வரவேற்க வேண்டிய நேரம். நாங்கள் வருகிறோம். ரோஜா சீரியலின் புதிய எபிசோட்கள் ஜூலை 27-ம் தேதி முதல் சன் டிவியில் என புதிய அப்டேட்டை வெளியிட்டிருந்தார். 

 மேலும் ரோஜா சீரியலின் தயாரிப்பு நிறுவனமும் தனது யூடியூப் பக்கத்தில் யாஷியா ஆனந்த் இருக்கும் ப்ரமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் யாஷிகா ரோஜா சீரியலில் நடிக்கிறாரா? எந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்?  என மிகுந்த, எதிர்பார்ப்பில் உள்ளனர்.