சினிமா

பிக்பாஸ் வெற்றி கொண்டாட்டம்! அட யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!

Summary:

பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி  வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.  அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின்  வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் ஆரி,பாலா, சனம், ரம்யா, ஜித்தன் ரமேஷ், ஆஜித் என பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான லாஸ்லியாவும் இந்த விழாவில் கலந்து கொண்டு உள்ளார். தந்தை இறப்பிற்கு பின் நீண்ட நாட்களுக்கு பிறகு லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement