
Bigboss vanitha latest photo viral
iபிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் ஒருவராக கலந்துகொண்டவர் வனிதா.
இவர் பிக்பாஸ் சீசன் 3 துவக்கத்திலிருந்து நிகழ்ச்சிக்கு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தினார். மேலும் எப்பொழுதும் மற்றவர்களின் பிரச்சனைகளில் தானாக தலையிட்டு பிக்பாஸ் வீட்டில் ஏராளமான பிரச்சினையை ஏற்படுத்தி வந்தார். அதுமட்டுமின்றி ஒருவருக்கொருவர் சண்டையையும் ஏற்படுத்தி வந்தநிலையில் அவருக்கு வத்திகுச்சி என்ற பெயரும் உள்ளது. அதனாலேயே போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் மோசமான விமர்சனங்களை பெற்று வந்தார்.
அதனை தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதா விருந்தினராக வந்த அவரது மகள்களிடம் நடந்து கொண்ட விதத்தை கண்ட ரசிகர்கள் அவரது தாய்மையைப் பாராட்டி புகழ்ந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் உடல் எடை குறைத்து மாடர்னாக காணப்படுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் வனிதாவா இது என பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Back in ACTION 😱 pic.twitter.com/BoM9wV6TqH
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 10, 2019
Advertisement
Advertisement