விடாமல் பின்தொடர்ந்த மர்மநபர்! பிக்பாஸ் பிரபலம் செய்த காரியம்! வைரலாகும் ஷாக் வீடியோ!!

விடாமல் பின்தொடர்ந்த மர்மநபர்! பிக்பாஸ் பிரபலம் செய்த காரியம்! வைரலாகும் ஷாக் வீடியோ!!


Bigboss vaishnavi shares video and complaint on that persion

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வைஷ்ணவி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது வைஷ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதனை சென்னை காவல்துறைக்கு டேக் செய்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.அந்த பதிவில் அவர் ‘நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் நாயுடன் நடைபயணம் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர் என்னை பின்தொடர்ந்து நான் செல்லும் இடமெல்லாம் வந்து கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் போன் பேசுவது போல் அந்த நபரை வீடியோ எடுத்தேன்.

மேலும் தனது வீடு அந்த மர்ம நபருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக 30 நிமிடங்களாக அவர் சாலையிலேயே நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வீடியோ வைரலான நிலையில், விஷ்ணுவின் செயலுக்கு பாராட்டு கிடைத்துள்ளது. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளது.