எதிரியா இருந்தா கூட இப்படி பேசகூடாது.. சாப்பிடும் போது பிரியங்கா சொன்ன வார்த்தை! கடுப்பான ஆண் போட்டியாளர்கள்!



bigboss todoy promo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இதில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கால் போட்டியாளர்கள் தங்களது முகத்திரையை கிழித்து சுய ரூபங்களை காட்டி வருகின்றனர். இவங்களும் இப்படியா? என பார்வையாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதங்கள் வெடித்து வருகிறது.

ஆரம்ப காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த பிரியங்கா மற்றும் நிரூப்க்கு இடையே சமீபகாலமாக பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிரியங்கா பாட்டு பாட அதற்கு நிரூப் அவளுக்கு பாட்டை தவிர ஒன்னும் தெரியாது  என கிண்டலாக பேசுகிறார். அதற்கு பிரியங்கா முதுகுல குத்துறத தவிர வேற என்ன தெரியும் என நம்மகூட கேட்கலாம் என பதிலடி கொடுக்கிறார்.

மேலும் ஆண் போட்டியாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, எல்லோருக்கும் சாப்பாடு இருக்கான்னு பார்த்துவிட்டு சாப்பிடுங்க. சாப்பாடு எடுக்கும்போது எல்லோருக்கும் அது பத்துமா? என பார்த்துட்டு நீங்க சாப்பிடுங்க என கூறுகிறார். பின் கோபமடைந்த சிபி எதிரியாக இருந்தாக்கூட சாப்பிடும் போது இப்படி பேசக்கூடாது என கூறுகிறார். இதனால் இன்று விவாதமே நடைபெறும் என தெரிகிறது.